துபாயில் விராட் கோலி மெழுகு சிலை திறப்பு - ரசிகர்கள் செல்ஃபி எடுத்து உற்சாகம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு துபாயில் மெழுகு சிலை திறக்கப்பட்டிருக்கிறது.
லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம், துபாயில் தனது புதிய கிளையைத் தொடங்கி இருக்கிறது. 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தற்போது அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விராட் கோலியின் மெழுகு சிலையை மேடம் டுசாட்ஸ் திறக்கப்பட்டுள்ளது. கால்பந்து வீரர் மெஸ்ஸி, நடிகர்கள் டாம் க்ரூஸ், ஜாக்கி சான் உள்ளிட்டோரின் மெழுகு சிலைகளும் துபாயில் தற்போது திறக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது, விராட் கோலிக்கு லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு மெழுகு சிலையை திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

