20 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட் : பப்புவா நியூ கினி அணியை வீழ்த்தி தள்ளியது ஸ்காட்லாந்து அணி
20 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்றில் பப்புவா நியூ கினி அணியை வீழ்த்திய ஸ்காட்லாந்து அணி, இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
ஓமனில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பெரிங்டன் 70 ரன்களும், மேத்யூவ் கிராஸ் 45 ரன்களும் எடுத்தார்கள். கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பப்புவா நியூ கினி அணி, சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது.
அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ரன்களில் ஆட்டத்தை இழந்தது.
இதனால், ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. தொடர்ந்து 2 வெற்றிகளைப் பதிவு செய்த ஸ்காட்லாந்து அணி, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருக்கிறது.