சர்வதேச டி20 போட்டி - மலிங்காவின் சாதனை முறியடித்து ஷகிப் அல் அசன் சாதனை
sports-cricket
By Nandhini
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற புதிய மைல்கல் சாதனையை வங்கதேச அணியின் ஷகிப் அல் அசன் முறியடைத்துள்ளார்.
20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அவர் இச்சாதனையை படைத்துள்ளார். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 107 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இந்நிலையில், ஷகிப் 108 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சாதனையை முறியடித்தார்.