ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா

sports-cricket
By Nandhini Oct 14, 2021 03:13 AM GMT
Report

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டின் 2-வது தகுதி சுற்று போட்டியில் டெல்லி கேப்பிடல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர்களான பிரித்திவி சா 18 ரன்களிலும், தவான் 36 ரன்களிலும் ஆட்டமிழந்து சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். மைதானம் பந்துச்வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க முடியாமல் திணறினார்கள்.

இறுதிக் கட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் 30 ரன்களும், ஹெட்மயர் 17 ரன்களும் சேர்க்க. 20 ஓவரில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

136 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வெங்கடேச அய்யர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாகவும் அதிரடியாகவும் ஆடினார். சிறப்பாக ஆடிய வெங்கடேஸ் அய்யர் 38 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். பிறகு 55 ரன்களில் அவர் ஆட்டத்தை இழந்தார்.

ஒரு கட்டத்தில் 26 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் இலக்கில் கையில் 9 விக்கெட்டுகள் இருந்ததால் கொல்கத்தா அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதனையடுத்து, டெல்லி பந்துவீச்சாளர்கள் அசத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். தினேஷ் கார்த்திக், மோர்கன், ஷகிப் அல் ஹசன் மற்றும் நரைன் ஆகியோரை அடுத்தடுத்து டக் அவுட் ஆக்கி வெளியேற்றி அசத்தினார் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள்.

கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் வீசிய அந்த பந்தை சிக்சர் அடித்து கொல்கத்தா அணியை வெற்றிபெற வைத்தார் ராகுல் திரிபாதி. 19.5 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி அடைந்தது.

இதனையடுத்து, கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 15ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை துபாயில் எதிர்கொள்ள உள்ளது.