பிராவோ சாதனையை முறியடித்த ஹர்ஷல் படேல்

sports-cricket
By Nandhini Oct 12, 2021 03:12 AM GMT
Report

ஒரு ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ட்வைன் பிராவோவின் சாதனையை ஹர்ஷல் பட்டேல் முறியடித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் எலிமினேட்டர் சுற்றின் முதல் போட்டியில் நேற்று மோதிக் கொண்டன.

இதில், பெங்களூரு அணியின் தோல்வியை தழுவியது. இதனால், தொடரிலிருந்து வெளியேறியது. இந்தத் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோலி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் இந்தத் தொடரில் சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

ஒரு ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோ சாதனை படைத்துள்ளார். 2013-ம் ஆண்டு சென்னை அணிக்கு விளையாடிய பிராவோ அந்தத் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு ஐ.பி.எல் தொடரில், ஒரு பந்துவீச்சாளர் வீழ்த்திய அதிக விக்கெட்டுகள் அதுதான்.

அந்தச் சாதனையை ஹர்ஷல் படேல் நேற்றைய போட்டியில் சமன் செய்திருக்கிறார். பிராவோ, ஹர்ஷல் பட்டேலுக்குப் பிறகு ரபாடா 30 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு அவர் 30 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 2011-ம் ஆண்டு தொடரில் 27 விக்கெட்டுகள் வீழ்த்திய மலிங்கா 3-வது இடத்தில் உள்ளார். 

பிராவோ சாதனையை முறியடித்த ஹர்ஷல் படேல் | Sports Cricket