தோனியை பாராட்டி பதிவிட்ட டுவீட்டை டெலிட் செய்து மீண்டும் பதிவிட்ட கோலி!

sports-cricket
By Nandhini Oct 11, 2021 07:27 AM GMT
Report

தோனி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் களமிறங்கி கடைசி ஓவரில் அபாரமாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தார். இதனால், என்னால் முடியும் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் தோனி.

இவரின் இந்த அபாரமான பினிஷிங்கால் முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், சர்ப்ரைஸாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டன் விராட் கோலி, தோனியை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலானது.

அதில், தி கிங் மீண்டும் வந்துவிட்டார். கிரிக்கெட்டில் மிக சிறந்த ஃபினிஷர் அவர் தான். என் இருக்கையை விட்டு மீண்டும் ஒருமுறை இன்று துள்ளிக் குதித்தேன் என பதிவிட்டிருந்தார். ஆனால், சில நொடிகளிலேயே இதனை டெலிட் செய்த கோலி, ‘Ever’ என்ற வார்த்தையை சேர்த்து மீண்டும் பதிவிட்டார்.

முதலில் பதிவிட்ட பதிவில், இந்த விளையாட்டில் சிறந்த ஃபினிஷர் அவர்தான் என இருந்தது. Ever என்ற இந்த வார்த்தை சேர்த்ததும், இந்த விளையாட்டில் ‘எப்போதும்’ சிறந்த ஃபினிஷர் தோனிதான் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் அந்த அளவிற்கு தோனியின் மீது விராட் கோலி மரியாதை வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.