“டி-20 உலகக் கோப்பையில் நான் தான் ஓப்பனர்.... கோலியே சொன்னார்” - இஷான் கிஷன்!
வரும் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை ஓமன் மற்றும் அமீரகத்தில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இந்திய அணிக்கு இந்த தொடரில் தொடக்க ஆட்டக்காரராக இஷான் கிஷன் களம் இறங்குவார் என்று அவரே கூறியிருந்தார். இந்திய அணியின் கேப்டன் கோலி இந்த உறுதியை அவரிடம் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். “எனக்கு ஓப்பனிங் விளையாட மிகவும் பிடிக்கும். அதையே தான் விராட் கோலியும் சொல்லி இருக்கிறார்.
உலகக் கோப்பை மாதிரியான பெரிய ஈவெண்டுகளில் எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நான் பார்முக்கு திரும்பியுள்ளது எனக்கும், அணிக்கும் நல்லது. அதுவும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடந்துள்ளது கூடுதல் சிறப்பு” என இஷான் கிஷன் தெரிவித்திருக்கிறார். கிஷன், ஐபிஎல் 2021 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
அந்த அணி லீக் சுற்றுடன் தொடரை நிறைவு செய்திருக்கிறது. இருந்தாலும், அந்த அணிக்காக விளையாடிய அவர் அடுத்தடுத்து 2 அரை சதங்களை பதிவு செய்திருக்கிறார். அதில் 32 பந்துகளில் 84 ரன்களும், 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததும் அடங்கியுள்ளது.