ஐபிஎல் - 2021 கிரிக்கெட் : நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா அசத்தலான சாதனை

sports-cricket
By Nandhini Oct 06, 2021 07:26 AM GMT
Report

இந்தியன் பிரீமியர் லீக் - 2021 சீசனில் நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தார்.

அதில் ​​ரோஹித்தின் பேட்டிலிருந்து ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் வெளியேறியது. டி-20 கிரிக்கெட்டில் ரோஹித் 400 சிக்ஸர்களை எட்டியிருக்கிறார்.

டி-20 கிரிக்கெட்டில் இந்தியாவிலிருந்து அதிக சிக்ஸர்களை அடுத்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா பதிவு செய்திருக்கிறார். டி-20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த உலக சாதனை கிறிஸ் கெய்ல் பெயரில் இருக்கிறது. அவர் 1042 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். 400 சிக்ஸர்களை அடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றிருக்கிறார்.

ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் சாதனையை ரோஹித் இப்போது முந்தியிருக்கிறார். பின்ச் தனது கணக்கில் 399 சிக்ஸர்களைக் கொண்டுள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ், இந்தியா, இந்தியா ஏ, இந்தியர்கள், மும்பை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் போது ரோஹித் இந்த சிக்ஸர்களை அடித்துள்ளார்.

டி-20 கிரிக்கெட்டில் 1000 சிக்சர்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் கெய்ல் மட்டும்தான். கீரான் பொல்லார்ட் 758 சிக்ஸர்களை அடித்து 2ம் இடத்திலும், ஆண்ட்ரே ரஸல் 510 சிக்ஸர்களுடன் 3 வது இடத்திலும் இருக்கிறார்கள். டி-20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த ரோஹித் தற்போது 7-வது இடத்தில் இருக்கிறார்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியைப் பற்றி பேசுகையில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் 8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றி அடைந்தது.

நாதன் கூல்டர்-நைல் 4 ஓவரில் 14 விக்கெட்டுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார், ஜிம்மி நீஷம் 4 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். மறுபுறம், இஷான் கிஷான் ஒரு வலுவான தொடக்கத்தை அளித்தார்.

ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்து ஒரு சிக்ஸருடன் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.