நடுவரை பார்த்து கோபமாக திட்டிய டேனியல் மெத்வதேவுக்கு 9 லட்சம் அபராதம் - நடந்தது என்ன?
நாற்காலி நடுவரைக் திட்டியதற்காக உலகின் 2ம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவுக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் – ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் நேற்று முன்னேறிச் சென்றார்கள்.
இருவரும் நாளை இறுதி போட்டியில் மோத இருக்கிறார்க்ள. நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதியில் போட்டியில் மெத்வதேவ், கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் இருவரும் மோதிக் கொண்டனர்.
அப்போது, போட்டியில் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை 7-6 (7-5), 4-6, 6-1, 6-1 டேனியல் மெத்வதேவ் வீழ்த்தினார்கள். இந்நிலையில், இப்போட்டியின் இடைவேளையில் நாற்காலி நடுவரை கோபமாகப் பார்த்து உலகின் 2ம் நிலை வீரரான டேனியல் மெத்வதே திட்டினார்.
மேலும், அவரை ‘சின்னப் பூனை’ என்று அழைத்ததற்காக ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. டென்னிஸ் ஆஸ்திரேலியாவுக்கு ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக ரூ.8,000 மற்றும் தவறான நடத்தைக்காக ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.