எனது விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தவில்லை! புதிய சர்ச்சையை கிளப்பிய கேன் வில்லியம்சன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 53 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை விளையாட தொடங்கியது.
9 ரன்கள் எடுத்த நிலையில் டாம் லேதம் விக்கெட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து 19 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் விளையாடிக் கொண்டிருந்த டேவான் கான்வாய் விகெட்டையும் ரவிச்சந்திரன் மிக அற்புதமாக கைப்பற்றினார்.
இவர்கள் இருவருக்கு அடுத்தபடியாக கேன் வில்லியம்சன் விக்கெட்டையும் ஆரம்பத்திலேயே ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு கட்டத்தில் கைப்பற்றி விட்டார் என்று அனைவரும் சந்தோசமாக நினைத்த வேளையில், கேன் வில்லியம்சன் ரிவ்யூ ஒன்றை எடுத்துள்ளார்.
அதில் கேன் வில்லியம்சன் அவுட் ஆகவில்லை என்கிற முடிவு வந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய அந்த பந்தில் கேன் வில்லியம்சன் அவுட் ஆகி விட்டார் என நடுவர் முடிவு அளித்தவுடன், கேன் வில்லியம்சன் உடனடியாக விரைந்து ரிவ்யூ எடுத்தார். ரிவ்யூ எடுத்த தருணத்தை தற்போது கேன் வில்லியம்சன் பகிர்ந்துள்ளார்.
நடுவர் எனக்கு அவர் கொடுத்த நொடியில் நான் அவுட் ஆகவில்லை எனக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று என் மனதிற்கு தோன்றியது. அதன் அடிப்படையில் உடனடியாக விரைந்து ரிவ்யூ எடுத்தேன். அவர் வீசிய பந்து, சற்று லெக் ஸ்டும்புக்கு வெளியே சென்று இருந்தது.
நான் நினைத்தது போலவே அந்த பந்தில் நான் அவுட் ஆகவில்லை என்கிற முடிவு வந்தது என்று கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். மேலும் இறுதிப் போட்டியில் பங்கெடுத்து இந்தியா போன்ற ஒரு பலம்வாய்ந்த அணிக்கு எதிராக என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்றும்,
எல்லாவற்றுக்கும் மேலாக மிக அற்புதமாக ஒரு அணியாக நாங்கள் செயல்பட்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்
போட்டியில் வெற்றி அடைந்த தருணம் எங்களால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது எனவும் கேன் வில்லியம்சன் மகிழ்ச்சி பொங்க தற்போது கூறியுள்ளார்.