விஜய் என்னைப் பார்த்து தான் 'INSPIRE' ஆனாரு.. - வாத்தி கம்மிங்... டான்ஸ் குறித்து அஸ்வின்

actor vijay sports aswin
By Nandhini Dec 28, 2021 05:35 AM GMT
Report

இந்திய அணி வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் கலந்துரையாடும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்கள், தனது கிரிக்கெட் பயணம் என பலவற்றைக் குறித்து, ஷர்துல் கேட்கும் கேள்விகளுக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவில், அஸ்வினிடம், 'நான் உங்களது டான்ஸ் வீடியோக்களை நிறைய பார்த்திருக்கிறேன். நீங்கள் உங்கள் தோள் பட்டையை சிறப்பாக சாய்த்து, வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடுனீர்கள்.

அது நன்றாக இருந்தது. அது உங்களின் பவுலிங் ஸ்டெப் காரணமாக அப்படி அமைந்ததா? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு அஸ்வின், வாத்தி கம்மிங் ஸ்டெப் போட்டுக் கொண்டே, 'இல்லை, அந்த ஸ்டெப் அப்படி தான் இருக்கும். ஒரு வேளை நடிகர் விஜய், என்னைப் பார்த்து தான் இன்ஸ்பயர் ஆகி, அந்த ஸ்டெப்பை போட்டிருப்பார்' என அஸ்வின் ஜாலியாக சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு, விஜய் நடிப்பில், 'மாஸ்டர்' படத்தில், 'வாத்தி கம்மிங்' பாடல் வெளியானது. இப்பாடல் மிகவும் ஹிட்டடித்தது. இந்திய கிரிக்கெட் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி, பாலிவுட் பிரபலங்கள் என பலர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியது அனைத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

விஜய் என்னைப் பார்த்து தான்

விஜய் என்னைப் பார்த்து தான்