‘நான் ஆண் குழந்தைக்கு தந்தையாகிவிட்டேன்...’ - பிரபல கிரிக்கெட் வீரர் மகிழ்ச்சி டுவிட் - வைரல் வீடியோ

sports
By Nandhini Oct 13, 2021 09:21 AM GMT
Report

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ள வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ், பெக்கி பாஸ்டன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார். இதனையடுத்து, இவர்கள் இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்க இருப்பதாகவும், அவரது காதலி பெக்கி பாஸ்டன் கர்ப்பமாக இருப்பதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. நான் ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ள சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும், புதிதாக பிறந்த தனது குழந்தைக்கு அல்பி பாஸ்டன் கம்மின்ஸ் என பெயரிட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ -