உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : வரலாற்று சாதனை படைத்தார் அன்ஷு மாலிக் - குவியும் பாராட்டு
sports
By Nandhini
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளிப் பதக்கம் வென்று அன்ஷு மாலிக் சாதனை படைத்துள்ளார். நார்வேயில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக், அமெரிக்கா வீராங்கனை முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஹெலின் மரோலிசுடன் நேற்று மோதினார்.
இதில், ஹெலினிடம், அன்ஷூ மாலிக் தோல்வியை தழுவி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனால், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்து பெருமை சேர்த்துள்ளார். படைத்துள்ளார்.
