தங்க மகன் நீரஜ் சோப்ராவின் ஸ்கூபா டைவிங் - அசத்தலான வீடியோ வைரல்

sports
By Nandhini Oct 02, 2021 06:52 AM GMT
Report

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று உலகப் புகழ் பெற்றார் நீரஜ் சோப்ரா. தற்போது அவர் ஸ்கூபா டைவராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்த ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்க் போட்டியில் நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை படைத்தார்.

இதனையடுத்து, தற்போது பரபரப்பான வாழ்க்கை முறையை அனுபவித்து வருகிறார். அவர் மாலத்தீவில் விடுமுறையை உல்லாசமாக கழித்து வருகிறார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது டுவிட்டரில் வெளியிட்ட ஸ்கூபா டைவிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நீரஜ், "வானத்திலும் இல்லை, பூமியிலும் இல்லை, நீருக்கடியில் என எங்கிருந்தாலும், நான் எப்போதும் ஜாவ்லினையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்!" என்ற பொருள்படும் என்று பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ -