என்ன ஆர்சிபி... இதெல்லாம் ஒரு ஸ்கோரா - தீபிகா படுகோனே டுவிட்

sports
By Nandhini 1 வருடம் முன்

ஐக்கிய அமீரகத்தில் தொடங்கிய ஐபிஎல் 2021 தொடரின் 2-வது பாதியில் ஆர்சிபி படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனேவின் ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 2-வது பாதியில் 31-வது ஆட்டத்தில் ஆர்சிபி, கேகேஆர் அணிகள் மோதிக் கொண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் மிக மோசமான ஆட்டத்தை பெங்களூரு பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தினார்கள்.

கோலி, படிக்கல், டிவில்லியர்ஸ் என அனைவரும் மிக மோசமான முறையில் ஆட்டம் இழந்தனர். 19 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதனையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக ஷப்மன் கில், வெங்கடேஷ் களமிறங்கினார்கள். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார்கள்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் மற்றும் வெங்கடேஷ் விக்கெட் இழக்காமல் ரன்களைக் குவித்தனர். விக்கெட் இழப்பின்றி வெற்றியை நெருங்கிய நிலையில் கில் 48 ரன் எடுத்திருந்த நிலையில், சாஹல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரூ ரஸல் களமிறங்கினார். ரஸல் ஸ்ரைக்குக்கு வந்து பந்தை எதிர்கொள்வதற்கு முன்பே வெங்கடேஷ் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து கொல்கத்தாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்களைக் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி அடைந்தது.

வெங்கடேஷ் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியில் ஆர்சிபி மோசமான தோல்வியை சந்தித்து ரசிகர்களின் விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே 2010 போட்ட ட்வீட் ஒன்றை, ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள். அந்த டுவிட்டர் பதிவில், இதெல்லாம் ஒரு ஸ்கோரா?, நீங்கள் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும் ஆர்சிபி. உங்களுக்காக போட்டியின் ஒவ்வொரு நொடியையும் நேரலையில் பார்த்து வருகிறோம். முன்னேறுங்கள் என பதிவிட்டிருந்தார்.