விராட் கோலி பயன்படுத்திய கார் விற்பனைக்கு வந்தது!

sports
By Nandhini Sep 20, 2021 08:09 AM GMT
Report

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பயன்படுத்திய லம்போர்கினி கார் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விதவிதமான கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்ட விராட் கோலி. இவர் லம்போர்கினி காரை 2015-ல் வாங்கினார். சிறிது நாள் பயன்படுத்திவிட்டு அதை அவர் விற்றுவிட்டார்.

இப்போது கொச்சியைச் சேர்ந்த கார் டீலரான ராயல் டிரைவ், விராட் கோலி பயன்படுத்திய புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட லம்போர்கினி கலார்டோ ஸ்பைடர் காரை ரூ.1.35 கோடிக்கு விற்க இருக்கிறார்.

ராயல் டிரைவின் மார்க்கெட்டிங் மேனேஜர் இதுபற்றி கூறுகையில், இது 2013 மாடல் கார் ஆகும். சில காலம் மட்டுமே விராட் கோலி பயன்படுத்தினார். 10,000 கி.மீ. மட்டுமே ஓடி இருக்கிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த கார் டீலரிடமிருந்து ஜனவரி 2021-ல் வாங்கினோம்.

இந்த கார் ஒரு மணி நேரத்தில் 324 கி.மீ. தூரத்தைக் கடந்துவிடும் என்றார். விராட் கோலி பயன்படுத்திய கார் என்பதால் அவருடைய ரசிகர்களில் யாராவது இக்காரை விரைவில் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

விராட் கோலி பயன்படுத்திய கார் விற்பனைக்கு வந்தது! | Sports