காபூலில் ட்ரோன் தாக்குதல் - மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க ராணுவம்

world
By Nandhini Sep 18, 2021 07:06 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

காபூலில் நடந்த ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இதற்கு அமெரிக்க ராணுவ உயரதிகாரி மன்னிப்பு கேட்டு வருந்தியுள்ளார்.

காபூல் விமான நிலையத்தை குறிவைத்து, ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் கோரசான் பிரிவு பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினார்கள். இதில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 175 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.எஸ்.கோரசான் பிரிவு பயங்கரவாதிகளை குறிவைத்து ட்ரோன் மூலம் அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இதில், பொதுமக்கள் 10 பேர் இறந்தனர்.

இந்நிலையில், பொதுமக்கள் உயிரிழந்ததற்கு மன்னிப்பு கேட்பதாக அமெரிக்க ராணுவத் தளபதி கூறியுள்ளார். பதிலடி தாக்குதலின்போது, அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு தான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றும், அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக கூறி இருக்கிறார். ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளதால், ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருக்கிறது. 

காபூலில் ட்ரோன் தாக்குதல் - மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க ராணுவம் | Sports