ஜடேஜா மருத்துவமனையில் திடீர் அனுமதி
கடந்த 4 நாட்களாக இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. அப்போது பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது.
போட்டி முடிந்ததும் அவரை அணி நிர்வாகம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, ஸ்கேனில் பெரியளவில் எந்தப் பாதிப்பு கிடையாது என்றும், 4 வது டெஸ்ட் போட்டிக்காக ஓவல் மைதானத்திற்கு அணியுடன் செல்ல எந்தத் தடையும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்திய அணியுடன் ஜடேஜாவும் லண்டன் புறப்படுவது உறுதியாகியுள்ளது.
ஜடேஜா தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.