சுரேஷ் ரெய்னா சுயசரிதை புத்தக்கத்துடன் தோனி! டுவிட்டரில் வைரல்
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா 'Believe' என்ற தலைப்பில் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு பலருக்கும் பரிசாக கொடுத்தார். இப்போது சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனிக்கு அந்தப் புத்தகத்தை பரிசாக கொடுத்திருக்கிறார்.
5 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி அக்டோபர் 15ம் தேதி வரை எஞ்சியுள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அமீரகத்தில் தற்போது முகாமிட்டிருக்கிறார்கள்.
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட அவர்கள் கடந்த சில நாட்களாக பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தன்னுடைய சமூகவலைத்தளத்தில் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை தோனியிடம் கொடுத்துவிட்டு அந்தப் புகைப்படத்துக்கு 'Thala’s touch on my untold story' என பதிவிட்டுள்ளார். தோனியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வரவில்லை என்றாலும் 'MS Dhoni: The Untold Story' என்ற திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்
பாசிக்கிடம் 250 மில்லியன் ரூபா லஞ்சம் கோரியுள்ள தேசபந்து! மீண்டும் சர்ச்சையில் விஜயதாச ராஜபக்ச IBC Tamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : இன்று முதல் சாட்சியங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil