41 வருடங்களுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி : வாழ்த்துக்களை அள்ளித் தெறித்த முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள்!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 வருடங்களுக்கு பிறகு வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது.இதனையடுத்து, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா – ஜெர்மனி அணிக்கு இடையேயான ஆடவர் ஹாக்கி அணி போட்டியில் இந்திய வெண்கலம் வென்று வெற்றிப்பெற்றுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் 3-வது ஹாக்கி வெண்கலப் பதக்கம் இதுவே ஆகும்.
இது குறித்து பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், சரித்தர சாதனை ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் நீங்கா இடம்பெற்ற நாளாக இது அமைந்துள்ளது என்றும், நமது ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்று நமது நாட்டுக்கு எடுத்து வருவதற்கு வாழ்த்துக்கள் என்றும், இந்திய ஹாக்கி அணியால் நமது நாடே பெருமை கொள்கிறது என பதிவிட்டு பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
இதே போல காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி டுவிட்டரில், இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பாராட்டுக்கள் என்றும் உங்கள் சாதனையால் பெருமை அடைகிறது என்றும் இது அவசியம் கிடைக்க வேண்டிய வெற்றி என பதிவிட்டு வாழ்த்தியிருக்கிறார்.
இது குறித்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 41 வருட காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. ஆண்கள் ஆக்கியில் 12 வது ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். நான் உறுதியாக நம்புகிறேன், டோக்கியோ 2020 இல் இந்த வெற்றியுடன், இந்திய ஆக்கி அணி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை IBC Tamil