மின்னல் வேகத்தில் ஓடி வந்தபோது சட்டென்று தவறி விழுந்த வீராங்கனை தங்கம் வென்ற அதிசயம்!

sports
By Nandhini Aug 03, 2021 10:18 AM GMT
Report

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் களத்தில் தவறி விழுந்த வீராங்கனை தங்கம் வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

ஒலிம்பிக் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த வீராங்கனை சிஃபான் ஹசன் என்பவர் களத்தில் ஓடினார். அப்போது அவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வீராங்கனையுடன் மோதி தடுமாறி கீழே விழுந்தார். இருப்பினும் அவர் மனம் தளராமல் மீண்டும் எழுந்து விளக்கை நோக்கி ஓடினார்.

விடாமுயற்சியோடு ஓடி முதல் இடத்தைப் பிடித்து தங்கம் வென்றார். களத்தில் தடுமாறினாலும் இலக்கில் தடுமாறாமல் தங்கம் வென்ற வீராங்கனைக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  

மின்னல் வேகத்தில் ஓடி வந்தபோது சட்டென்று தவறி விழுந்த வீராங்கனை தங்கம் வென்ற அதிசயம்! | Sports

மின்னல் வேகத்தில் ஓடி வந்தபோது சட்டென்று தவறி விழுந்த வீராங்கனை தங்கம் வென்ற அதிசயம்! | Sports

மின்னல் வேகத்தில் ஓடி வந்தபோது சட்டென்று தவறி விழுந்த வீராங்கனை தங்கம் வென்ற அதிசயம்! | Sports