டோக்கியோ ஒலிம்பிக் - வாள் வீச்சில் இந்திய வீராங்கனை பவானி தேவி தோல்வி!

sports
By Nandhini Jul 26, 2021 05:02 AM GMT
Report

ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி கலந்து கொண்டு, முதல் சுற்றில் துனிஷிய வீராங்கனை பென் அசிசியை எதிர்கொண்டு ஆடினார். தனது சிறப்பான வாள் வீச்சின் மூலம் 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் பென் அசிசியை தோல்வியடைய செய்தார்.

சென்னையைச் சேர்ந்த பவானிதேவி ஒலிம்பிக் வாள்வித்தை போட்டியில் முதன்முறையாக களமிறங்கி, தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் வாள் வீச்சில் சேபர் பிரிவில் இந்திய வீராங்கனை பவானிதேவி தோல்வியடைந்தார். 15 –7 என்ற புள்ளிகள் கணக்கில் பவானி தேவியை பிரான்ஸ் வீராங்கனை மனோன் புரூனைட் வீழ்த்தினார்.

டோக்கியோ ஒலிம்பிக் - வாள் வீச்சில் இந்திய வீராங்கனை பவானி தேவி தோல்வி! | Sports