டோக்கியோ ஒலிம்பிக் - பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து அபார வெற்றி!

2 months ago

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்ட்டன் முதல் சுற்றில் இஸ்ரேல் வீராங்கனை பாலிகர்போவாவை 21-7, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை இந்திய நேரப்படி 7.10 மணிக்கு தொடங்கிய மகளிர் ஒற்றையர் பேட்மிண்ட்டன் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இஸ்ரேலின் ஸெனியா பாலிகர்போவாவை எதிர் கொண்டு விளையாடினார். 

தொடக்கம் முதலிலிருந்தே பி.வி.சிந்து சிறப்பாக விளையாடினார். முதல் செட்டை 21-7 என வென்ற பி.வி. சிந்து, 2வது செட்டை 21-10 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்