டோக்கியோவில் கோலாகலமாகத் தொடங்கியது ‘ஒலிம்பிக் திருவிழா’- வீரர் வீராங்கனைகள் உற்சாக பங்கேற்பு!

sports
By Nandhini Jul 23, 2021 11:38 AM GMT
Report

உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்கி இருக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 3வது முறையாக கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

அதன் படி, இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா உட்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஒலிம்பிக் திருவிழா அணிவகுப்புடன் இன்று தொடங்கியது.

கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு போட்டிகளை நேரில் காண அனுமதி வழங்கப்படவில்லை. ஒலிம்பிக்கில் மொத்தம் 46 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது.

அதில், 18 போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய வீரர், வீராங்கனைகள் 127 பேர் டோக்கியோவுக்கு சென்றிருக்கிறார்கள். ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியாவின் சார்பில் 19 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் தேசிய கொடியையேந்திச் சென்றனர்.

டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கியிருக்கும் ஒலிம்பிக் ஜப்பான் மன்னர் நாருஹிரோ தொடக்கி வைத்தார். ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சூகா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தியா சார்பில் பங்கேற்கும் 127 வீரர்கள் நிலையில் அவர்களுடன் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 228 பேர் அடங்கிய குழு டோக்கியோவில் முகாமிட்டுள்ளனர்.

இந்த முறை துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், வில்வித்தை உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா 17 பதக்கங்கள் வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை முத்தமிடுகிறார்களா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும். 

டோக்கியோவில் கோலாகலமாகத் தொடங்கியது ‘ஒலிம்பிக் திருவிழா’- வீரர் வீராங்கனைகள் உற்சாக பங்கேற்பு! | Sports