ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு : இந்திய அணியை பின்னுக்கு தள்ளியது நியூசிலாந்து அணி!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்தில் இருந்த இந்திய அணியை பின்னுக்கு தள்ளியிருக்கிறது.
அடிக்கடி ஐசிசி வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதனையடுத்து, டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்துக்கு வந்துள்ளது. அதே போல, 2வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி சென்றுள்ளது.
இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து 123 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்தியா (121 புள்ளிகள்) இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியா (108) மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
இதேபோல இங்கிலாந்து 4-வது இடத்தையும், பாகிஸ்தான், 5 வது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் 6வது இடத்தையும், தென் ஆப்பிரிக்கா 7வது இடத்தையும், இலங்கை 8-வது இடத்தையும், வங்கதேசம் 9வது இடத்தையும், ஜிம்பாப்வே 10வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
இப்போது நியூசிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 18 முதல் 22ம் தேதி வரை சவுத்தாம்டன் நகரில் நடைபெற உள்ளது.