இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அறிவிப்பு - ஐபிஎல்லில் தூள் கிளப்பிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

sports
By Nandhini Jun 11, 2021 05:43 AM GMT
Report

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இளம் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணிக்கு தவான் தலைமையேற்க உள்ளார்.

ஜுலை 13ம் தேதி ஒரு நாள் போட்டி நடைபெறும். அதன் பின்னர், ஜுலை 21 தேதி டி20 தொடங்கும். போட்டிகள் அனைத்தும் கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தவான் தலைமையில் இளம் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தவான் (கேப்டன்), தேவதத் படிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதீஷ் ராணா, இசான் கிஷன், சஞ்சு சாம்சன், சாஹல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சக்கரியா ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். 

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அறிவிப்பு - ஐபிஎல்லில் தூள் கிளப்பிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு | Sports