நான் எப்போதும் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதில்லை - அவர் தான் பேசுகிறார் - மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நான் எப்போதும் முதலமைச்சர் அல்லது எடப்பாடி பழனிசாமி என்று தான் சொல்லி வருகிறேன். அவரை ஒருபோதும் ஒருமையில் பேசியதும் இல்லை, அழைத்ததும் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள உள்ளது.
தமிழகத்தில் இத்தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் போட்டா போட்டிக் கொண்டு அரசியல் தேர்தல் களத்தில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். திமுக, அதிமுக இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. தலைவர்களும், வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் தெரு தெருவாக சென்று மக்களிடையே வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, முதல்வர் என பதவியை வைத்து நான் எப்போதும் சொல்லி வருகிறேன்.
இல்லையென்றால் பழனிசாமி என்று அவரின் பெயரை சொல்லியும் தான் பேசிவருகிறேன். ஆனால், எடப்பாடி பழனிசாமிதான் என்னை ஒருமையில் அவ்வப்போது பேசி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.