'' போய் வாடா என் பொலி காட்டு ராசா '' - அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற்றார் - ஹர்பஜன் சிங்
இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர்களுள் ஒருவரான ஹர்பஜன் சிங் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
41 வயதாகும் ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறார். ஹர்பஜன் தன் ஐபிஎல் தொடர் வாழ்க்கையின் இறுதிப் பகுதிகளிலேயே மெண்ட்டாராக பணியாற்றத் தொடங்கி விட்டார்.
வருண் சக்ரவர்த்தியை ஒரு அற்புதமான ஸ்பின்னராக்கியடில் ஹர்பஜனின் பங்கு அபரிமிதமானது. 13 ஐபிஎல் சீசன்களில் 163 மேட்ச்களில் ஆடியுள்ள ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
சராசரி 26, ஒருமுறை 18 ரன்களுக்கு 5 விக்கெட் சாய்த்தது அவரது சிறந்த பந்து வீச்சு. டெஸ்ட் கிரிக்கெட்டில் 417, ஒருநாள் போட்டிகளில் 269 சர்வதேச டி20 போட்டிகளில் 25 என்று 700 விக்கெட்டுகளுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்துள்ளார்.
மொத்தமாக 1200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை அவர் மொத்த கிரிக்கெட் வாழ்வில் கைப்பற்றியுள்ளார். கடைசியாக 2016-ல் யுஏஇக்கு எதிராக டாக்காவில் டி20 சர்வதேச போட்டியில் ஆடினார் ஹர்பஜன் சிங். கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆர்சிபி அணியுடன் சென்னையில் ஏப்ரல் 2021-ல் ஆடினார் ஹர்பஜன் சிங்.
இந்த நிலையில்ஹர்பஜன் சிங் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்:
“அனைத்து நல்ல விஷயங்களும் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. எனக்கு அனைத்தையும் வழங்கிய கிரிக்கெட்டை விட்டு நான் விடைபெறுகிறேன். இந்த 23 ஆண்டுகால பயணத்தை அழகாக்கிய அனைவருக்கும் என் நன்றிகள். என் இதயம் கனிந்த நன்றிகள் அனைவருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்