இந்த ஒரு விஷயத்த மட்டும் அஸ்வின் திருத்தியே ஆகனும் : அட்வைஸ் கொடுக்கும் சங்ககாரா

Ravichandran Ashwin
By Irumporai Jun 01, 2022 09:30 PM GMT
Report

ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆப் ஸ்பின்னில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 15வது சீசன், கொரோனா விதிமுறைகள் காரணமாக, மொத்த போட்டிகளும் மும்பை ஆடுகளங்களில் வைத்து நடத்தப்பட்டது

15வது தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டதால் மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட நெடுந்தொடராக நடத்தப்பட்டது. இதில் யாருமே எதிர்பாராத வகையில் மற்ற அனைத்து அணிகளையும் விட மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, முதல் அணியாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்று, தனது முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

இந்த நிலையில் இறுதி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட குஜராத் அணியின் வெற்றி குறித்தும், இறுதிப்போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குறித்தும் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஒரு விஷயத்த மட்டும் அஸ்வின் திருத்தியே ஆகனும் :  அட்வைஸ் கொடுக்கும் சங்ககாரா | Spin Kumar Sangakkara On Ravichandran Ashwin

அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மிக மோசமாக பந்துவீசிய ரவி அஸ்வின் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககாரா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அஸ்வின் குறித்து பேசிய சங்கக்காரா, அஸ்வின் ராஜஸ்தான் அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார், அவர் கிரிக்கெட்டில் செய்த சாதனைகள் இன்றியமையாதது.

ஆனால் அவர் தன்னுடைய பந்துவீச்சில் கொஞ்சம் முன்னேற்றத்தைக் கொண்டு வர வேண்டும், குறிப்பாக ஆப் ஸ்பின்னில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,மேலும் போட்டியின் பொது ஆப் ஸ்பின் அதிகமாக போட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.