சென்னை விமான நிலையத்தில் 107 அரியவகை சிலந்திகள் பறிமுதல்!

airport chennai spiders
By Irumporai Jul 02, 2021 01:59 PM GMT
Report

 சென்னை விமான நிலையத்தில் இன்று போலாந்து நாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய  சிலந்தி வகையில் உள்ள 107 சிலந்திகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போலந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றின் மீது சந்தேகமடைந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர்.

அப்போது அந்த பார்சலில் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலந்தி வகையைச் சேர்ந்த 107 சிலந்திகள் இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் அந்தப் பார்சலை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலில் இடம்பெற்றுள்ள முகவரி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வருடமாக மருத்துவ ஆராய்சிக்காக சிலந்திகள் சர்வதேச அளவில் கடத்தப்படுவதாக  ஆய்வுகள் கூறுகின்றன.