ஸ்பைஜெட் விமானம் தரையிறங்கியபோது விபத்து : அலறிய பயணிகள் வெளியான திக் திக் வீடியோ காட்சிகள்

By Irumporai May 02, 2022 04:04 AM GMT
Report

மும்பையிலிருந்து துர்காபூர் இயக்கப்படும் ஸ்பைஜெட் மேசமான வானிலை காரணமாக தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசமான வானிலை காரணமாக மும்பையிலிருந்து துர்காபூருக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் போயிங் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்த நிலையில்,அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், விமான விபத்து தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறுகையில்: “மும்பையிலிருந்து துர்காபூருக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் போயிங் பி737 விமானம் நேற்று தரை இறங்கும் போது மோசமான வானிலையை எதிர்கொண்ட நிலையில் விபத்து ஏற்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக ஒரு சில பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் துர்காபூர் வந்தடைந்தவுடன் உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டது.இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு ஸ்பைஸ்ஜெட் வருத்தம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.