31 வயதில் 57 குழந்தைகள் - ஆனால் பாலியல் வாழ்க்கை சாத்தியப்படவில்லை என கவலை!
31 வயதில் 57 குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் பாலியல் வாழ்க்கையே சாத்தியப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தாராள பிரபு
அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் கைலே கோர்டி(31). இவர் விந்தணு கொடையாக வழங்குவதை இலவச சேவையாக செய்து வருகிறார். அதன் படி, உலகம் முழுவதும் இதுவரை 57 குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார்.

அடுத்து 14 குழந்தைகள் வர தயாராக உள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த விந்தணு நன்கொடை செய்வது தவிர்த்து, வேறு பாலியல் வாழ்க்கை என்பது தனக்கு இல்லை. வெளியே சென்று பாலியல் உறவு வைத்து கொள்ளாததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று,
ஆதங்கம்
அந்த விந்தணுவை நான் பாதுகாக்க விரும்புகிறேன். அதனால், ஒரு சிறந்த கர்ப்பம் ஏற்படும் வாய்ப்பை அளிக்கிறேன். நன்கொடை அளிக்கும் வரை பாதுகாப்புடன் இருப்பதனால், விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அதனால், நன்கொடைக்காக அதனை விடுவிக்கும்போது வெற்றி கிடைக்கிறது. பல பெண்களுடன் சென்று பாலியல் உறவு வைத்து அதனால் தொற்று வியாதி ஏற்படும் ஆபத்து நிகழாமல் தவிர்க்கவும் இப்படி இருக்கிறேன். அதனால், எனக்கு என்று நிறைய பொறுப்புகள் உள்ளன என அவர் கூறுகிறார். பிறருக்கு உதவுவதற்காக டேட்டிங்கையே விட்டு கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.