Friday, May 9, 2025

அவனியாபுரம் ஜல்லிகட்டின்போது மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

jallikattu madurai avaniyapuram spectator died
By Swetha Subash 3 years ago
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க சென்ற பாலமுருகன் என்பவர் மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

அதனை தொடர்ந்து இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாலமுருகன் என்பவர் மீது மாடு முட்டி தள்ளி உள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.