வழக்கறிஞர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்: ஆர்வத்துடன் எடுத்துக் கொண்ட வழக்கறிஞர்கள்
சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம். ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் முன்கள பணியாளர்களை தொடர்ந்து 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தது.
மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள முன்பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கால தாமதம் ஆகி வருகிறது.
இந்தச் சூழலில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள நீதிபதி, வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரும் விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள உத்தரவினை பிறப்பித்தது.
அதனைத் தொடர்ந்து சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்தில் இன்று ஏற்படுத்தப்பட்ட சிறப்பு முகாமில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.