தமிழகத்தில் வரும் 20 ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
தமிழகத்தில் நாளை மறுதினம் 20ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டிருக்கும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வருவதால் போக்குவரத்துக்கு தளர்வு அளிக்க முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் 20ம் தேதி முதல் முதற்கட்டமாக 10 சிறப்பு ரயில்களை இருவழிகளிலும் இயக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்து அறிவித்திருக்கிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர், கொல்ல, ராமேஸ்வர, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கும், சென்னை செண்ட்ரலில் இருந்து கோவை , ஆலப்புழா, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாகவும் ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.