சபரிமலைக்கு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது.
இந்த ரயில் சேவை கோவை வழியாக செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சபரிமலைக்கு சிறப்பு ரயில்
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையின் படி, “வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை, சென்னை – கொல்லம் (சிறப்பு ரயில் (06061)) வாரந்தோறும் புதன்கிழமை அன்று சபரிமலைக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும்.
காலை 8:45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06062) மறுநாள் அதிகாலை 03:50 மணிக்கு சென்னையை வந்துசேரும்.
வரும் நவம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி மாதம் 26ம் தேதி வரை வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாஸ்சேரி, திருவாலா, செங்கனூர், மாவேலிகாரா, காயம்குளம், சாஸ்தான்கோட்டா ஆகிய நிலையங்களில் ரயில் வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.