பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு அல்வா கொடுத்த சிறப்பு எஸ்ஐ டிஸ்மிஸ்..!
சென்னை பரங்கிமலையில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த ஆண்ரூஸ் கால்டுவெல் ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக பழகி ஏமாற்றிய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் துறை ரீதியான விசாரணைக்கு பின்னர் பணியில் இருந்த நிரந்தரமாக நீக்கப்படுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் பிறப்பித்துள்ளார்.
பெண்ணிடம் உல்லாசம்
சென்னை பரங்கிமலையில் சிறப்பு உதவி ஆய்வாளராக (சிறப்பு எஸ்ஐ) பணிபுரிந்தவர் ஆண்ரூஸ் கால்டுவெல். இவர் 2021 ஆம் ஆண்டு பெண் ஒருவரிடம் குடும்பப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாக தலையிட்டுள்ளார்.
பின்னர் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் ஆண்ரூஸ் மற்றும் அந்த பெண்ணும் தனியாக வீடு எடுத்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆண்ரூஸ் கால்டுவெல் திருமணத்துக்கு மறுத்ததோடு, அப்பெண்ணை ஏற்கவில்லை. இதனால் வேதனை அடைந்த அப்பெண், சிறப்பு எஸ்ஐ மீது 27-07-2022 அன்று பள்ளிக்கரனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தற்காலிக பணிநீக்கம்
அதன்படி போலீசார் விசாரணையும் நடத்தினர். இந்த விசாரணையில் ஆண்ரூஸ் கால்டுவெல் மீதான குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறப்பு எஸ்ஐ ஆண்ருஸ் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்தநிலையில் சிறப்ப உதவி ஆய்வாளர் ஆண்ரூஸ் கால்டுவெல் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். இதனால் அவரை போலீசார் கைது செய்யவில்லை.
பின்னர் துறை ரீதியாக விசாரணை நடத்திய காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜுன் மாதம் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
துறை ரீதியான விசாரணைக்கு ஆஜராகமல் இருந்த நிலையில் அவரது முன் ஜாமீன் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மோட்டார் வாகனப்பிரிவு துணை ஆணையர் சிறப்பு எஸ்ஐ ஆண்ரூஸை சஸ்பெண்ட் செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து ஆண்ரூஸ் கால்டுவெல்லை காவல் துறையில் இருந்து நிரந்தர பணிநீக்கம் செய்து சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.