அரசு அதிரடி : அதிக குழந்தைகள் பெற்றால் சிறப்பு ஊதியம்
அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டால், சிறப்பு ஊதியம் வழங்குவதாக சிக்கிம் அரசு அறிவித்துள்ளது.
சிறப்பு ஊதியம்
இந்தியாவின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலமான சிக்கிம், அதன் மக்களிடையே பிரசவத்தை ஊக்குவிக்க விரும்புகிறது.

இதனையடுத்து இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு, மற்றும் மூன்றாவது குழந்தைக்கு இரண்டு ஊதிய உயர்வுகளை வழங்கும் என முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 2021 இல், சிக்கிமின் அமைச்சரவை, அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்றும், ஆண்கள் 30 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
மேலும் சிக்கிமில் உள்ள மருத்துவமனைகளில் ஐவிஎஃப்(IVF) வசதியை தொடங்கியுள்ள அரசாங்கம், இதன்மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு 3லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும் கூறினார்.