தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் : முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

M K Stalin DMK
By Irumporai Apr 24, 2022 04:06 AM GMT
Report

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

காஞ்சிபுரத்தில் செங்காடு கிராமத்தில் நடைபெறும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

அதே சமயம்,ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல்இருந்த நிலையில்,தற்போது நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி மற்றும் வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து உறுதிமொழி எடுக்க மக்களை ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் : முதலமைச்சர் ஸ்டாலின்  பங்கேற்பு | Special Grama Niladhari Meeting Tamil Nadu

மேலும்,சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டதற்கான விவரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பதிவேற்றுமாறு ஊரக வளர்ச்சித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே,இனி வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்கள் மட்டுமல்லாது மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய நாட்களிலும் என 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என கடந்த இரு தினங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Tags