உக்ரைனில் இருந்து 240 பேருடன் 3-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது

RussiaUkraineConflict UkraineRussiaWar
By Irumporai Feb 27, 2022 04:47 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் -ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு வரவேண்டும் என தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில்உக்ரைனில் இருந்து சாலை வழியாக ருமேனியாவுக்கு இந்திய மாணவர்களை வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் இந்திய மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்தது.

உக்ரைனில் இருந்து  240 பேருடன் 3-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது | Special Flight Arrives In Delhi From Hungary

இந்த சூழ்நிலையில், உக்ரைன் ஹங்கேரியில் இருந்து 240 பேருடன் மூன்றாவது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. ஏற்கனவே 2 சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் இருந்து 469 பேர் அழைத்து வரப்பட்டனர்.

இதனால், இதுவரை 709 பேர் வந்துள்ளனர். உக்ரைனில் இந்தியர்கள் சுமார் 20,000 பேர் இருக்க வாய்ப்புள்ளது. எனவும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 3,000 பேர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.