பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டிஜிபி வழக்கு 8 வாரங்களுக்குள் முடிக்கப்படும்: சிபிசிஐடி தகவல்
தமிழகத்தில் சிறப்பு டிஜிபி ஒருவர் பெண் எஸ்.பியை பாலியல் தொல்லை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதோடு மட்டுமில்லாது பாதிக்கப்பட்ட அதிகாரியை புகார் அளிக்கவிடாமல் தடுக்கும் முயற்சிகளையும் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபி மீதான புகார் பற்றி விசாரிக்க தமிழக அரசு சிறப்பு குழு ஒன்றை அமைத்திருந்தது.
பெண் அதிகாரியை புகார் அளிக்கவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. உயர்நீதிமன்றம் கடிந்து கொண்டதைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்நிலையில் சிறப்பு டிஜிபி மீதான பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதிலளித்துள்ளது.