திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.! எதற்காக?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற மே 6-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு காவல்துறையினருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனை வைத்து முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக திமுக பிரச்சாரம் செய்து வந்தது.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கி எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த இரு வழக்குகளிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 6ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு ஏற்கனவே இது போல தொடர்ந்திருந்த பல்வேறு அவதூறு வழக்குகள் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.