உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு - தமிழக அரசு உத்தரவு
உக்ரைன் மீது ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை ஆபரேஷன் கங்கா மூலம் மத்திய அரசு விரைந்து மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் வெளியேறும்படி இந்திய துாதரகம் உத்தரவிட்டிருந்தது.
உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள இந்தியர்கள் பெசோசின்,பபாயி,பெஸ்லியுடோவ்கா ஆகிய பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய துாதரகம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் தான் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த குழுவில், எம்.பி.க்கள் திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இவரகளுடன் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் செயல்பட உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து உக்ரைன் சென்ற 2223 மாணவர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு அவற்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை உக்ரைனில் இருந்து 193 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.