கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? பள்ளிக் கல்வித்துறை அதிரடி!

Tamil nadu Education
By Jiyath Apr 22, 2024 08:50 AM GMT
Report

விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை 

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள. இந்நிலையில் சில தனியார் பள்ளிகளில் அடுத்த ஆண்டுக்கான பாடங்களை சிறப்பு வகுப்பாக நடத்தி வருவது நிகழ்ந்து வருகிறது.

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? பள்ளிக் கல்வித்துறை அதிரடி! | Special Classes Should Not Be Conducted

இந்நிலையில் கோடைக் காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதாலும், விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் "முதல்வர் தனிப்பிரிவில் 14417-ல் பெறப்பட்ட புகார் மனுவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும்,

நடவடிக்கை 

இதனால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார் பெறப்பட்டுள்ளது. இப்புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்குமாறும்,

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? பள்ளிக் கல்வித்துறை அதிரடி! | Special Classes Should Not Be Conducted

மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்க அழுத்தம் தரக்கூடாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கூறப்பட்ட ஆணையை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.