கொரோனா தடுப்பூசி செலுத்த ..மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணியினை தமிழக அரசு விரைவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை கொடுக்கும் வகையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் : அனைத்து கொரோனாதடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்.
அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுத் தளம் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்படும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.