மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் - அமைச்சர் செந்தில் பாலாஜி
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
100 யூனிட் இலவச மின்சாரத்தில் மாற்றமும் இல்லை
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பினால் வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும்,
அதே போன்று கைத்தறி, விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மானியம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும், குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிறப்பு முகாம்
டிசம்பர் 31 ஆம் தேதி வரை பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தினை எவ்வித சிரமம் இன்றி ஏற்கனவே உள்ள முறையின் படி செலுத்தலாம்.
வரும் 28 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை முதல் மின்சார கட்டணம் செலுத்தும் அலுவலகங்களில் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்சாரத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான Tangedco இணையத்தளம் மூலம் இணைத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவிததுள்ளார்.