பொங்கல் பண்டிகை; இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Thai Pongal Government of Tamil Nadu Chennai
By Thahir Jan 12, 2023 02:45 AM GMT
Report

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூர் செல்வது வழக்கம். தமிழக போக்குவரத்து துறை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.

ஜன 12 இன்று முதல் 14-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் 5 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Special buses will operate from today

இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையிலிருந்து 651 பேருதுகளும் பிற முக்கிய நகரங்களில் இருந்து 1,508 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.