Weekend Special - சொந்த ஊருக்கு செல்ல 400 சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!
மக்கள் சிரமமின்றி சொந்த ஊருக்கு செல்ல இன்று முதல் ஞாயிறு வரை 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்கள்
சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர் நோக்கி பயணிப்பது வழக்கம்.
அந்த பயணங்களை எளிதாக்க, இந்த வார இறுதி நாட்களில் 200 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
400 கூடுதல் பேருந்துகள்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து 200 பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 200 பேருந்துகள் என மொத்தமாக 400 பேருந்துகள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் சுதந்திர தினத்தை சனிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் பயணிக்க முன்பதிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.