தொண்டர்களுக்கு திமுக தலைமையின் முக்கிய அறிவுறுத்தல்

dmk mk stalin
By Fathima May 02, 2021 08:14 AM GMT
Report

தற்போதைய நிலவரப்படி திமுக 140 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்தது, கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தொடக்கம் முதலே தபால் வாக்குகளில் திமுக முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

140க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதால், திமுக தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் வெற்றிகை கொண்டாட வீதியில் யாரும் திரள வேண்டாம்; வீடுகளிலேயே வெற்றியை கொண்டாடுங்கள்  என கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காலம் என்பதால், வெற்றியை வீடுகளிலேயே கொண்டாடுமாறு ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.