ஒலிக்க துவங்கிய தெற்கின் குரல்....#Speaking4India'வில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் #Speaking4India Podcast வெளியாகி தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
தெற்கிலிருந்து வரும் இந்தக் குரலுக்காகக் காத்திருங்கள்
இது குறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், உங்களில் ஒருவன் பதில்கள் என்ற வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர் அதற்கு Awakening India's Tomorrow, A Southern Voice Speaks for #INDIA! என Caption இட்டுள்ளார்.
அந்த ஆடியோவில், இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம் என குறிப்பிட்டு, 2024ஆம் முடியப் போற பாஜக ஆட்சி இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்கிறது என்றும் எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகின்ற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஆடியோ சீரியஸில் பேசப் போகிறேன் என தெரிவித்திருந்தார்.
வெளியானது தெற்கின் குரல்
தற்போது அந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. Youtube, Spotify, amazon music, soundcloud என பல்வேறு இணையதளங்களில் இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம், இந்தியாவை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜகவை எதிர்த்து பல மொழிகளிலும் வெளியாகி இருக்கும் இந்த ஆடியோ பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
To watch/listen to all episodes of 'Speaking for India' Podcast series in Tamil, Telugu, Malayalam, Kannada, Hindi languages visit the official website: https://t.co/QxIOWAaSwV#Speaking4India வலையொலித் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி… https://t.co/I5ZTWN9Dkf
— M.K.Stalin (@mkstalin) September 4, 2023